கொத்தாக மாட்டிய சாமியார் சொத்து; முடக்கிய வரித்துறை
வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து கல்கி சாமியாருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடந்ததில் கண்டறியப்பட்ட சொத்துக்களை முடக்கியுள்ளது வருமான வரித்துறை
வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து சாமியார் கல்கி ஆசிரமத்தில் சமீபத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கிடைத்த ரூ.44 கோடி ரொக்கம், 90 கிலோ தங்கம், ரூ.20 கோடி மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம், கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அந்த சோதனையில் கல்கி ஆசிரமம் 800 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் கல்கி சாமியார் குடும்பத்திற்கு சொந்தமான 907 ஏக்கர் நிலத்தை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. இத சொத்துக்கள் பக்தர்கள் மற்றும் அவர்கள் நடத்தி வரும் பள்ளிகளின் ஊழியர்கள் பெயரில் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.