”பல்கலைக்கழகத்திலிருந்து அண்ணா பெயரை அகற்ற முயற்சி”.. ஸ்டாலின் குற்றச்சாட்டு
அதிமுக அரசு அண்ணா பல்கலைக்கழகத்தை கொல்லைபுறம் வழியாக மத்திய அரசிடம் அண்ணாவின் பெயரை அகற்ற முயற்சி செய்வதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சிறப்பு அந்தஸ்து தருவதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட குழு தமிழக அரசால் அமைகப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், திமுக ஆட்சி காலத்தில் மாணவர்கள் வசதிக்காக அண்ணா பல்கலைக்கழகத்தை பிரித்தபோது அதிமுக கடுமையாக எதிர்த்தது. ஆனால் தற்போது அதிமுக அரசு கொல்லைப்புறம் வழியாக மத்திய அரசிடம் ஒப்படைக்கவும், அண்ணா பெயரை அகற்றவும் குழு அமைத்திருப்பதாக சந்தேகம் எழுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதில், “அண்ணா பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தை கூறுபோட நினைக்கும் அதிமுக அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.