1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kalaingar award for best journalists

சிறந்த இதழியலாளருக்கு ”கலைஞர் எழுதுகோல் விருது” – செய்தி மற்றும் விளம்பரத்துறை அறிவிப்பு!

Tamilnadu
தமிழகத்தில் சமூக மேம்பாட்டிற்காக சிறந்த பங்களிக்கும் இதழியலாளருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் பல முக்கியமான திட்டங்கள், அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழகத்தில் சமூக மேம்பாடு மற்றும் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காக பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 லட்ச ரூபாய் பணமும், பாராட்டு சான்றிதழும் இவ்விருதில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
அசாமில் கொட்டித் தீர்க்கும் மழை… பூங்காவில் விலங்குகள் பலி!