செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (11:21 IST)

அண்ணா பல்கலை.யில் அப்துல்கலாம்; ராணிமேரியில் ரவிந்திரநாத் தாகூர்! – சிலை அமைக்கும் தமிழக அரசு!

சுந்திர போராட்ட வீரர்கள், இலக்கியவாதிகளை பெருமைப்படுத்தும் விதமாக சிலைகள் அமைப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் பல முக்கியமான திட்டங்கள், அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கும், ராணி மேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூருக்கும் சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாய்நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகள், மொழிப்போர் தியாகிகள், தலைசிறந்த இலக்கியப் படைப்பாளிகள், சமூக நீதிக்காக போராடியவர்கள், திராவிட இயக்க முன்னோடிகள் ஆகியோர்களைப் போற்றும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிலைகள் நிறுவப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.