திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 2 ஜூன் 2022 (20:04 IST)

கலைஞர் எழுதுகோல் விருது பெற்றவர்களின் பெயர்கள் அறிவிப்பு!

karunanidhi
கலைஞர் எழுதுகோல் விருது பெற்றவர்களின் பெயர்கள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரங்கள் பின்வருமாறு:
 
ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருதையும், ரூ.5 லட்சம் பரிசுத்தொகையையும் நாளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கவுள்ளார் 
 
தமிழ்நாடு அரசின் கலைஞர் எழுதுகோல் விருதுக்கு மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கு புகழ்பெற்ற திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ்(90) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
மேற்கண்ட விருது பெறும் கலைஞர்களுக்கு விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது!