1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 29 ஜூன் 2021 (09:38 IST)

அதிமுக பெயரை தவறாக பயன்படுத்தினால் சட்டமன்ற கூட்ட நடவடிக்கை: கடம்பூர் ராஜூ

அதிமுக பெயரை தவறாக பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார் 
 
சட்டமன்ற தேர்தலின்போது சசிகலா கோவில் வழிபாடு என்ற போர்வையில் மறைமுகமாக தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்று குற்றம் சாட்டிய கடம்பூர் ராஜு அதிமுகவின் தோல்விக்கு அதுவும் ஒரு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்
 
கடந்த சில நாட்களாக தினசரி சசிகலா ஆடியோ வெளியீட்டு வருவதால் அதிமுக தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதிமுக தலைவர்கள் சசிகலா குறித்து தினந்தோறும் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அதிமுக பெயரை தவறாக பயன்படுத்தினால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் எடுக்கப்படும் என கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்