புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 மார்ச் 2022 (09:47 IST)

அதிமுகவில் ஒற்றைத்தலைமை: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து

அதிமுகவில் ஒற்றை தலைமை ஏற்பட்டால் அதனை தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். 
 
அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் ஓபிஎஸ் இபிஎஸ் என இரட்டை தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என ஒரு சிலர் குரல் எழுப்பி வருகின்றனர் 
 
இது குறித்து கருத்து கூறிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுக ஒற்றை தலைமையில் இயங்குவதாக முடிவெடுத்தால் தொண்டர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியுள்ளார் அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
தற்போதுள்ள இரட்டை தலைமைக்கு கட்டுப்பட்டு அதிமுக தொண்டர்கள் பணி செய்து வருவதாகவும் கட்சித் தலைமை முடிவு எடுத்து ஒற்றை தலைமையில் கீழ் இறங்குவதை ஏற்றுக் கொள்வார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்