செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 30 நவம்பர் 2018 (21:12 IST)

தெய்வங்கள் இனி பாதுகாப்பாக இருக்கும்: பொன் மாணிக்கவேல் விவகாரம் குறித்து வீரமணி

கடவுள் மறுப்பு கொள்கையை உடைய திகவினர் அடிக்கடி இந்து தெய்வங்களை மட்டும் கிண்டல் செய்து வருவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்று பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தால் மீண்டும் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டதை திக தலைவர் கி.வீரமணி கிண்டலுடன் கூடிய ஒரு கருத்தை கூறியுள்ளார்.

பொன்.மாணிக்கவேலுக்கான ஓராண்டு கால பதவி நீட்டிப்பால் இனி தெய்வங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றும், விசா இல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்ற தெய்வம் மீண்டும் தமிழகம் வரும் என எதிர்பார்க்கலாம் என்றும் இந்த விவகாரம் குறித்து வீரமணி கருத்து கூறியுள்ளார்.

கீ.வீரமணியின் இந்த கருத்துக்கு 'திராவிட ஆட்சிகளின் கீழ் செயல்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் தான் பெருமளவிலான தெய்வங்களை விசா இல்லாமல் நாடு கடத்தியதாகவும், திருடிய திருடனே அய்யோ திருடன்! அய்யோ திருடன்! என ஓடுவது போல் வீரமணியின் கருத்து உள்ளதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.