கண்கள் இருந்தால் கண்ணீர் வரத்தான் செய்யும்… கே எஸ் அழகிரி பதில்!
திமுக கூட்டணியில் கேட்கும் இடங்கள் கிடைக்கவில்லை என்று கூறிக்கொண்டே தேம்பி தேம்பி அழுது பரபரப்பைக் கூட்டினார் காங்கிரஸ் தலைவர் அழகிரி.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையில் இழுபறியில் உள்ளது. இந்நிலையில் நேற்று காங்கிரஸ் அலுவலகத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி நாம் கேட்கும் எண்ணிக்கையும் அவர்கள் கேட்கும் எண்ணிக்கைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அவர்கள் கொடுப்பதை நாம் பெற்றுக்கொண்டால் நாளை காங்கிரஸ் கட்சியே இருக்காது எனக் கூறிக்கொண்டே அழ ஆரம்பித்தார். இது அரசியல் தளத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது கண்கள் இருந்தால் கண்ணீர் வரத்தான் செய்யும் எனக் கூறிச் சென்றுள்ளார்.