திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 25 அக்டோபர் 2018 (10:38 IST)

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் - நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் நடவடிக்கை செல்லாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.

 
தகுதி நீக்க வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணனுக்கு சென்றது. கடந்த ஜூன் மாதம் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
அதன்படி இன்று காலை 10.15 மணிக்கு சத்தியநாராயண் தீர்ப்பை வாசிக்க நீதிமன்றத்திற்கு வந்தார். சரியாக 10.30 மணிக்கு அவர் தீர்ப்பை வாசிக்க தொடங்கினர்.
 
தீர்ப்பை வாசித்த அவர், சபாநாயகரின் முடிவில் தவறு இல்லை மற்றும் தகுதி நீக்கம் சட்டவிரோதமானது அல்ல எனக்கூறிய அவர், 18 எம்.ஏல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தார். மேலும், 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 
இதனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரும், எம்.எல்.ஏக்களாக தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.