செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 25 அக்டோபர் 2018 (10:11 IST)

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு: என்னென்ன நடக்க வாய்ப்பு?

கடந்த ஆண்டு சட்டமன்ற சபாநாயகர் தனபால் அவர்களால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளிவரவுள்ளது.

இந்த தீர்ப்பில் 18 எம்.எல்.ஏக்க்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டால் ஆட்சிக்க்கு எந்த ஆபத்தும் இல்லை. மொத்தமுள்ள 234 எம்.எல்.ஏக்களில் இரண்டு தொகுதிகள் காலியாக உள்ளதால், 232 எம்.எல்.ஏக்களில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.க்களை கழித்துவிட்டால் 214 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். எனவே ஒருவேளை மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடப்பட்டாலும் அதிமுகவுக்கு 108 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால் அதிமுகவுக்கு தற்போது 109 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதால் ஆட்சிக்கு பிரச்சனை இல்லை.
ஆனால் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என தீர்ப்பு வந்தால் 232 எம்.எல்.ஏக்களில் 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு வேண்டும். எனவே ஆட்சி கவிழ வாய்ப்பு அதிகம்

மேலும் இந்த வழக்கின் மூன்றாவது நீதிபதியை சுப்ரீம் கோர்ட்டே தேர்வு செய்துள்ளதால் இருதரப்பினர்களும் அப்பீல் செல்ல முடியாது என்று கூறப்படுகிறது. எது எப்படியோ இன்று ஊடகங்களுக்கு நல்ல டிஆர்பி என்பது மட்டும் உறுதி.