வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 12 அக்டோபர் 2018 (14:13 IST)

நக்கீரன் விவகாரம்- ஆளுநர் மாளிகை விளக்கம்

நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்புபடுத்தி கடந்த ஏப்ரல் மாதம் கநக்கீரன் பத்திரிக்கையில் கட்டுரை எழுதியது சம்பந்தமாக நக்கிரன் அலுவலகத்தில் பணிபுரியும் 30 பேர் மீதும் அதன் ஆசிரியர் நக்கீரன் கோபால் மீதுன் வழக்கு தொடரப்பட்டது.
அதனைத்தொடர்ந்து புனே செல்ல இருந்த கோபாலை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.
 
அதன் பலகட்ட போரட்டங்களுக்கு பிறகு பத்திரிக்கையாளர்களின் கருத்து சுதந்திரத்தை மதித்த  நீதிபதி கோபிநாத் நக்கீரன் ஆசிரியர் கோபாலை அன்று மாலை விடுதலை செய்து உத்தரவிடார்.
 
இது நடந்து சில மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்று ஆளுநர் அலுவலகமான ராஜ்பவனில் இருந்து நக்கீரன் இதழ் கட்டுரை விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக   ஒரு கடிதம் எழுதி வெளியிடப்பட்டிருக்கிறது.
 
அதில்  கூறியுள்ளதாவது.
 
நக்கீரன் பத்திரிகையில் வெளியான குற்றசாட்டுகள் ஆளுநர் மாளிகையின் மாண்பை கெடுக்கும் விதத்தில் உள்ளது.
 
இதற்கு முன் ஆளுநரையோ, செயலரையோ, அதிகாரிகளையோ நிர்மலாதேவி சந்திக்கவில்லை.
 
நிர்மலாதேவி அளித்த வாக்குமூலம் என ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியான தகவல்களிலும் சிறிதும் உண்மையில்லை.
 
கடந்த ஒருவருடத்தில் ஆளுநர் மாளிகைக்கு நிர்மலாதேவி வரவில்லை .
 
உண்மை எதுவென்று தெரிந்துகொள்ளாமல் நக்கீரனில் வெளியான கட்டுரையை சிலர் ஆதரிக்கின்றனர்.
 
மேலும் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக நக்கீரன் இதழில் வெளியான தகவல்கள் அனைத்தும் தவறானவை. காவல்துறையினரிடம் நிர்மலாதேவி அளித்த வாக்குமூலம் கூட சரிபார்க்கப்படாமல் ஊகத்தின் அடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
 
 மதுரை காமரஜர் விடுதியில் ஆளுநர் தங்கவில்லை .அரசியல் சாசன பொறுப்பில் இருக்கும் ஆளுநருக்கு வரும் மறைமுக அச்சுறுத்தல்களை பொறுத்துக் கொள்ள முடியாது.
 
இப்படியிருக்க நக்கீரனில் வெளிவந்த தகவல்கள் தவறானவை. நிர்மலாதேவி விவகாரத்தில் போலீஸார் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
ஆளுநர் மதுரை காமராசர் பல்கலை கழகத்திற்கு செல்லும் போது அவரது செயலர் உடன் வரவில்லை என ஆளுநர் மாளிகை நிர்வாகம் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.