1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 28 ஜனவரி 2019 (20:00 IST)

தனியார் பள்ளி ஆசிரியர்களுடன் ஒப்பிட்டு கொள்ளுங்கள்: போராட்டக்காரர்களுக்கு நீதிபதி கோரிக்கை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக போராட்டம் செய்து வரும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்து வருவதை அடுத்து இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி லோகநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது 'தனியார் பள்ளி ஆசிரியர்களின் சலுகைகளோடு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். மேலும் வேலை நிறுத்த போராட்டம் குறித்து ஜாக்டோ ஜியோ அமைப்பும், தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அரசின் நிதி நிலை தொடர்பான விஷயம் என்பதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் நீதிபதிகள் கூறினர்.
 
இதுகுறித்த இன்னொரு வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்திலும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி கிருபாகரன், 'தேர்வு நேரத்தை கருதில் கொண்டு, போராட்டம் நடத்தி வரும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியுமா? என கேள்வி எழுப்பியதோ இது குறித்து நாளை மதியம் பதிலளிக்க ஜாக்டோ ஜியோ அமைப்புக்கு உத்தரவிட்டார். போராட்டம் நடத்துவதற்கு தேர்வுகாலம் தான் சரியான நேரமா?  மாணவர்கள் நலனில் ஆசிரியர்களுக்கு அக்கறையில்லையா? எனவும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.