வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 27 ஜனவரி 2019 (18:07 IST)

நாளை பணிக்கு வந்தால் நடவடிக்கை இல்லை! இல்லையேல்? பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

கடந்த ஒரு வாரமாக ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் உள்பட அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருவதால் அரசுப்பணிகளும், பள்ளிப்பணிகளும் பெரும் பாதிப்பில் உள்ளது. 
 
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்தும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை. இந்த நிலையில் நேற்றுமுதல் ஜியோ அமைப்பின்  நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, 
 
இந்த நிலையில் போராட்டம் செய்யும் ஆசிரியர்கள் உள்பட அனைவரும் நாளை அதாவது ஜனவரி 28க்குள் பணிக்கு திரும்பினால் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், இல்லையேல் நாளை பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப்பணியிடங்கள் என்று கருதப்படும் என்றும், அந்த இடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும், அவகாசம் முடிந்து வரும் ஆசிரியர்களுக்கு, ஏதேனும் ஒரு காலிப்பணியிடத்தில் துறை நடவடிக்கைக்கு உட்பட்ட பணியேற்க ஆணை தரப்படும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார்.