பொது இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்ட எந்த கடவுளும் கேட்பதில்லை - உயர்நீதிமன்றம்
பொது இடத்தில் கோவில் கட்ட எந்த கடவுளும் கேட்பது இல்லை என நீதிமன்றம் அதிரடியாக கூறி உள்ளது.
நாமக்கல் பகுதியில் மாரியம்மன் கோவில் ஒன்று சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதை அடுத்து அந்த கோவிலை இடிப்பது குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் வந்தது
இந்த வழக்கில் நீதிபதி கூறிய போது பொது பொதுபாதையில் கோவில் நிர்வாகம் கட்டியுள்ள கட்டுமானங்களை இரண்டு மாதங்கள் அப்புறப்படுத்த வேண்டுமென்றும் கோவில் என்ற பெயரில் பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டலாம் என்ற எண்ணம் சிலரிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்
மேலும் பொது இடத்தில் ஆக்கிரமித்து புதிய கோவில்களை கட்டி எந்த கடவுளும் கேட்பதில்லை என்றும் கடவுளே ஆக்கிரமித்து இருந்தாலும் அதை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்