வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 8 செப்டம்பர் 2018 (16:25 IST)

சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் - கருவை கலைக்க நீதிமன்றம் உத்தரவு

ஒரு ஆட்டோ டிரைவர் சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய விவகாரத்தில் சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
திருப்பூரை சேர்ந்த 17 வயது நிரம்பாத 12ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை பள்ளிக்கு அழைத்து செல்ல ஒரு சந்தோஷ்குமார் என்கிற ஆட்டோ ஓட்டுனரை அந்த சிறுமியின் பெற்றோர்கள் நியமித்திருந்தனர்.  சிறுமியை பள்ளிக்கு அழைத்து சென்ற போது, அந்த ஆட்டோ டிரைவர் தனக்கு திருமாணமானதை மறைத்து காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.
 
அதனை நம்பிய அந்த சிறுமி, கடந்த மே மாதம் அந்த டிரைவருடன் சென்றுவிட்டாள். அதன்பின் சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து சிறுமியை மீட்டனர். மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரிவந்தது. இதையடுத்து, சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
 
அதேபோல், அந்த சிறுமியை காப்பகத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், சிறுமியான தன் மகளின் கருவை கலைக்க உத்தரவிட வேண்டும் என அவரின் தாயார் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
 
அதனை ஏற்று, சிறுமியின் கருவைக் கலைத்து மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கோவை அரசு மருத்துவக்கல்லூரி டீனுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.