திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 ஏப்ரல் 2018 (09:59 IST)

17 வயது சிறுமியை திருமணம் செய்து கொடுக்க மறுத்த குடும்பத்தை கொலை செய்த கயவன்

17 வயது மைனர் சிறுமியை திருமணம் செய்து கொடுக்க மறுத்த குடும்பத்தையே கூண்டோடு கொலை செய்த ஒருவரை ஜார்கண்ட் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மேற்கு சிங்பும் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்சிங் என்பவருக்கு மூன்று மகள்கள் இருந்தனர். இவர்களில் 17 வயது ரம்பா என்பவரும் ஒருவர். இவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் ராம் சிங்கை வற்புறுத்தியுள்ளார். இவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதாலும், தனது மகளுக்கு 17 வயதே ஆவதாலும் இந்த திருமணத்திற்கு ராம்சிங் ஒப்புக்கொள்ளவில்லை

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், ராம் சிங் வீட்டுக்கு தனது கூட்டாளிகளுடன் வந்து அவரது மனைவி மற்றும் குழ்ந்தைகளை இரும்புக் கம்பியால் தாக்கியும் கூர்மையான ஆயுதங்களால் குத்தியும் கொலை செய்துள்ளனர். பின்னர் கடைசியாக ராம்சிங்கையும் கொலை செய்து ஐந்து பேரின் உடல்களையும் அருகிலிருந்த வனப்பகுதியில் தூக்கி வீசியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்த போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் கைது மட்டுமே செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாகவுள்ள 8 பேர்களை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது