வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 14 ஜூன் 2023 (14:45 IST)

காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி?

senthil balaji
இதய அறுவைச் சிகிச்சைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதனை அடுத்து அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் திடீரென நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையின் இருதயல் துறை சார்ந்த நான்கு மூத்த மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.

இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரையால் காவேரி மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, இதய அறுவைச் சிகிச்சைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.