அண்ணாமலையை கேள்வி கேட்ட நிருபர் பணியிலிருந்து நீக்கம்? பரபரப்பு தகவல்..!
அண்ணாமலையை கேள்வி கேட்ட பிரபல பத்திரிகை நிருபர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது லண்டனில் நீங்கள் செந்தில் பாலாஜி சகோதரரை சந்தித்தீர்களா என்ற கேள்வியை நிருபர் ஒருவர் கேட்டார்.
அவரிடம் சரமாரியாக மறு கேள்விகள் கேட்ட அண்ணாமலை இந்த தகவலை உங்களுக்கு யார் சொன்னது என்று கேட்டார். அதற்கு அந்த நிருபர் பதில் சொல்ல முடியாமல் திணறினார் என்பதும் இதனை அடுத்து நீண்ட நேரம் அவருக்கு பத்திரிகையாளர் என்றால் என்ன அவர் எப்படிப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டும் ஊடக தர்மம் என்றால் என்ன என்பது குறித்து விளக்கினார்
இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த நிருபரை சம்பந்தப்பட்ட பத்திரிகைகயில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran