திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 29 ஜூன் 2023 (07:51 IST)

செந்தில் பாலாஜி சகோதரரை ரகசியமாக சந்தித்தீர்களா? செய்தியாளர் கேள்விக்கு அண்ணாமலை ஆவேசம்

லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு தமிழகம் வந்த அண்ணாமலையிடம் செய்தியாளர் ஒருவர் லண்டனில் செந்தில் பாலாஜி சகோதரரை ரகசியமாக சந்தித்தீர்களா என்ற கேள்விக்கு அண்ணாமலை ஆவேசமடைந்தார் 
 
எட்டாம் வகுப்பு படிக்கும் பையன் போல் ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்கக்கூடாது என்றும் இந்த தகவலை உங்களுக்கு யார் சொன்னது என்று கூறுங்கள் என்றும் தெரிவித்தார். 
 
ஒரு கேள்வி கேட்டால் அதற்கு நீங்கள் ஆமாம் இல்லை என்று பதில் சொல்லலாம் என்று கூறிய அந்த செய்தியாளர் கூறியபோது நான் எதற்காக இல்லை என்று சொல்ல வேண்டும்? என்னிடம் முட்டாள்தனமான கேள்வியை கேட்கக்கூடாது நான் ஒரு மாநில தலைவர், எதன் அடிப்படையில் இந்த கேள்வியை கேட்கிறீர்கள் உங்களுக்கு யார் இந்த தகவலை கொடுத்தது என்று சரமாரியாக அண்ணாமலை கேள்வி எழுப்பினார் 
 
இதனை அடுத்து அந்த செய்தியாளர் திணறியதாகவும் தெரிகிறது. எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் செய்தியாளர்கள் கேள்வி கேட்டதை பொதுமக்கள் கண்டித்து வருகின்றனர்.
 
Edited by Siva