1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 28 ஜூன் 2023 (13:48 IST)

உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு உள்ளாக நேரிடும்: சிதம்பரம் கோவில் விவகாரம் குறித்து பாஜக..!

chidambaram
உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு உள்ளாக நேரிடும் என சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் குறித்து பாஜக பிரமுகர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை, உத்தரவை, வழிகாட்டுதலை மீறி செயல்படுவது நீதியல்ல என்பதோடு அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானதும் கூட.
 
அரசு தன் பிடிவாதத்தை தளர்த்தி ஆகம விதிகளை கடைபிடிக்க திமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் செயல்பட வேண்டியது கட்டாயம். இல்லையேல், உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு உள்ளாக நேரிடும்.
 
Edited by Mahendran