தனுஷ், விஜய்சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர்

Sinoj| Last Modified திங்கள், 22 மார்ச் 2021 (23:46 IST)

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்
விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், தேசிய
விருது பெற்றுள்ள நடிகர்கள் தனுஷ் மற்றும் விஜய்சேதுபதிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.


2019 ஆம் ஆண்டின் சிறந்த படத்திற்கான தேசிய விருது அசுரன் படத்திற்கும் இப்படத்தில் நடித்ததற்காக தனுஷிற்கு சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்படத்தில் நடித்த தனுஷிற்கு 2 வது முறையாக தேசிய விருது கிடைத்துள்ளது. ஆடுகளம் படத்திற்கு பிறகு இந்த விருதை தனுஷ் பெற்றார்.


சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த விஜய் சேதுபதி சிறந்த துணைநடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், இதுகுறித்துப் பதிவிட்டுள்ளதாவது: தமிழ் திரையுலகம் நம்மை கௌரவப்படுத்தியிருக்கிறது! தேசிய விருது பெற்ற "அசுரன்" படக்குழுவினருக்கும் சிறந்த நடிகராக தேர்வாகியிருக்கும் தனுஷ்@dhanushkrajaஅவர்களுக்கும் சிறந்த துணை நடிகராக தேர்வாகியிருக்கும்@VijaySethuOfflஅவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்! எனத் தெரிவித்துள்ளார்.

விஸ்வாசம் படத்தில் பாடலுக்காக டி.இமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :