வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 1 செப்டம்பர் 2022 (19:19 IST)

செருப்புக்கு சமமில்லை என கூறுவதா? அண்ணாமலை ஜோதிமணி எம்பி கண்டனம்!

Jothimani
தமிழக நிதியமைச்சரை செருப்புக்கு சமமில்லை என கூறுவதா? என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காங்கிரஸ் ஜோதிமணி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 
 
அரசியலில் கடுமையான கருத்து மோதல்கள் இருக்கலாம்.ஆனால் அது அநாகரிகமாக,கண்ணியக்குறைவாக  இருக்கக்கூடாது. மிகச்சிறந்த அறிவாளியும்,நிர்வாகியுமான நிதியமைச்சர்  பிடிஆர் பழனிவேல்ராஜன் அவர்களை எனது செருப்புக்கு சமமில்லை என்று சொல்வது அநாகரிகத்தின் உச்சம். அதிகார போதையின்  வெளிப்பாடு
 
இளைய தலைமுறையை சேர்ந்த ஒருவரிடமிருந்து  இதுபோன்ற கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம் வெளிப்படுவது வருத்தத்திற்குரியது. அரசியலில் நம்பிக்கையுள்ள இளைஞர்களைக் கூட இதுபோன்ற அரசியல் கலாசாரம் வெறுப்படைய வைத்துவிடும்.