1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2022 (18:08 IST)

''தமிழக பாஜகவிற்கு இரண்டு தலைவர்கள்'' - கே.எஸ். அழகிரி கிண்டல்!

alagiri
தமிழகத்தில் பாஜகவிற்கு 2  தலைவர்கள் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கிண்டலடித்துள்ளார்.

நெல்லையில்  தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட  கலந்தாய்வு கூட்டம் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில்   நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தெங்காசி, ராம நாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவ நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.  

அப்போது பேசிய கே.எஸ்.அழகிரி,  தமிழக ஆளு நர் ரவி மிகச்சிறப்பாகச் செயல்படுகிறார். அண்ணாமலை விளம்பரத்திற்காக முரண்டான தகவல்கள் கூறி வருகிறார் என்று தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொளவதற்கு முன்னதாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,  தமிழகத்தில் பாஜகவிற்கு 2  தலைவர்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.

தமிழகத்தில்  காங்கிரஸ் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கட்சி மேலிடத்தால்  நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில்  ஆளுங்கட்சியில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி பல ஆதாரங்களையும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வைத்தார். சமீபத்தில் திருக்குறளுக்கு உரை எழுதிய ஜியுபோல் உரையில் ஆன்மீக கருத்துகளை நீக்கிவிட்டதாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.