வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2022 (16:08 IST)

ஒரு கன்னத்தில் அடித்தால் திருப்பி அடிப்பேன்: பாஜக அண்ணாமலை

Annamalai
விநாயகர் சதுர்த்தி தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்தவர் முன்னாள் முதல்வர் அண்ணா என்றும் ஆனால் இன்றைய முதல்வர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
தமிழக முதலமைச்சர் தான் மத அரசியல் செய்கிறார் என்றும் அதை விட்டுவிட்டு பாஜக மதவாத அரசியல் செய்கிறது என்று கூறுவது முற்றிலும் தவறானது என்றும் தெரிவித்துள்ளார் 
 
விநாயகர் சதுர்த்தி தீபாவளி போன்ற இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்க மாட்டேன் என்பது அரசியல் சட்டத்திற்கு எதிராக இருக்கிறது என்பது எங்கள் கருத்து என்றும் அவர் கூறியுள்ளார் 
 
மேலும் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட நான் இயேசுநாதர் கிடையாது என்றும் என்னை அடித்தால் நான் திருப்பி அடிப்பேன் என்றும் இரு மடங்காக அடிப்பேன் என்றும் மரியாதையாக அரசியல் திமுக செய்தால் நானும் மரியாதையாக அரசியல் செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்