திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (19:29 IST)

கர்நாடகாவில் இருந்து வரும் அண்ணாமலைக்கு இது தெரிய வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்

TTV Dinakaran
கர்நாடகாவில் இருந்து வந்த அண்ணாமலைக்கு மொய் விருந்து குறித்து தெரிய வாய்ப்பில்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் 
 
புதுக்கோட்டை மாவட்டம் பேராவூரணி என்ற பகுதியில் நடத்திய திமுக பிரமுகர் ஒருவர் நடத்திய மொய் விருந்து குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் 
 
இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள டிடிவி தினகரன் புதுக்கோட்டை பேராவூரணி பகுதிகளில் காலங்காலமாக நடந்து வரும் மொய் விருந்தை கொச்சைப்படுத்துகிறார் என்றும், வட்டியில்லா கடன் கொடுத்து ஒருவரை கைதூக்கிவிடும் ஒரு நல்ல நிகழ்வு பற்றி கர்நாடகாவில் இருந்து வந்த அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பில்லை என்றும் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்