புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (18:05 IST)

சென்னையில் ஜோதிமணி எம்பி திடீர் கைது!

காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி திடீரென சென்னையில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் பாஜகவின் முன்னாள் பொதுச் செயலாளர் கேடி ராகவன் அவர்களின் சர்ச்சைக்குரிய வீடியோ வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார் 
 
இந்நிலையில் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்திருந்த ஜோதிமணி எம்பி, இன்று செனை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து கமலாலயம் வரை முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் சற்றுமுன் அவர் இந்த போராட்டத்தை நடத்திய நிலையில் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழகத்தில் பாஜகவில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் இது மேலும் ஒரு பொள்ளாச்சி சம்பவம் ஆக மாறி விடக்கூடாது என்பதற்காகவே இந்த போராட்டம் நடத்தப் பட்டதாகவும் கைதான ஜோதிமணி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்