கவர்னராகிறார் பொன்னார்? அப்படியெனில் கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் யார்?
தமிழக பாஜகவின் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் வரும் பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவருக்கு கவர்னர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் இதனை அடுத்து கன்னியாகுமரி தொகுதிக்கு பெண் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இணை அமைச்சரான பொன் ராதாகிருஷ்ணன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் பாஜக தேசிய தலைமை அவரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக அவருக்கு பஞ்சாப் மாநில கவர்னர் பதவி தர இருப்பதாகவும் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
எனவே கன்னியாகுமரி தொகுதியில் வலிமையான போட்டியாளராக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்த்தை எதிர்கக விஜயதாரிணியை பாஜக தேர்வு செய்துள்ளதாகவும் அவர் விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு எதிராக முன்னாள் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் போட்டியிட போவதால் கன்னியாகுமரி தொகுதி பரபரப்பையை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva