செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 13 நவம்பர் 2019 (13:58 IST)

சிறுவனின் மூக்கில் உயிருடன் மாட்டிய ஜிலேபி: போராடி மீட்ட டாக்டர்!

சிறுவன் ஒருவன் கிணற்றில் குளித்த போது மூக்கில் சிக்கிய ஜிலேபி மீனை டாக்டர்கள் போராடி வெளியில் எடுத்துள்ளனர். 
 
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் அருள்குமார். 7 ஆம் வகுப்பு படிக்கும் அருண் தனது நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றுள்ளான். அப்போது அவன் மூக்கில் ஏதோ ஒன்று புகுந்துள்ளது. 
 
இதனால் வலியிலும் பயத்திலும் அழுத அருணை அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர் அருணை பரிசோதித்த போது அவனது மூக்கில் உயிருடன் சிரிய ஜிலேபி மீன் இருந்ததை கண்டுபிடித்தார். 
 
இதன் பின்னர்  சிரமப்பட்டு அருணின் மூக்கில் இருந்த ஜிலேபி மீனை உயிரோடு வெளியே எடுத்துத்துள்ளார். இது வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.