திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 9 டிசம்பர் 2018 (11:03 IST)

டிடிவி. தினகரனின் ஆன்மீக குரு மூக்குப்பொடி சித்தர் மரணம்

திருவண்ணாமலையில் உள்ள மூக்குப்பொடி சித்தர் இன்று காலை 5 மணி அளவில் மரணமடைந்தார். இவரிடம் பலரும் சென்று ஆசிர்வாதம் வாங்கி வருவது பல வருடமாக நடந்து வந்தது. 
 
பச்சை நிற சால்வை அணிந்து கொண்டு ஒரு இடத்தில் மௌனமாக அமர்ந்திருக்கும் அவரிடம் ஆசிபெற்றால் நமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகிவிடும் என பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். 
 
இதைவிட சுவாரஸ்யமான ஒன்று தலையை குனிந்த படி கீழே பார்த்துக்கொண்டிருக்கும் அவர் நிமிர்ந்து நம்மை பார்த்துவிட்டால் யோகம் அடிக்கும் என்பது நம்பிக்கை...  
 
இவர் அடிக்கடி மூக்குப்பொடு போடுவதால் இவரை மூக்குப்பொடி சித்தர் என அழைத்தனர். இவரது உண்மையான பெயர் மொட்டையக்கவுண்டர். சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராஜபாளையம். 
 
இவரை டிடிவி தினகரன் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி ஆகியோர் அவ்வப்போது தரிசனம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.