சுபஸ்ரீ வழக்கில் பேனர், கொடி கட்டிய 4 பேர் கைது
கொடி கட்டுவது, பேனர் வைப்பது போன்றவற்றை செய்யும் நான்கு பேரை சுபஸ்ரீ வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பள்ளிக்கரணையில் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ, பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது லாரி ஏறியதில் அவர் பரிதாபமாக பலியானார்.
இதனையடுத்து அந்த பேனரை தயாரித்த கடைக்கு சீல் வைக்கபட்டது. ஆனால், அந்த பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் தலைமறைவானார். இதனை தொடர்ந்து 14 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு நேற்று கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல ரிசார்டில் பதுங்கியிருந்த ஜெயகோபாலை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், இதனைத்தொடர்ந்து சுபஸ்ரீ வழக்கில் மேலும் பழனி, சுப்பிரமணி, சங்கர் மற்றும் லட்சுமிகாந்த் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொடி கட்டுவது, பேனர் வைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.