புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 18 ஜூன் 2025 (17:31 IST)

ஜூன், ஜூலை தான் கோடை காலமா? படிப்படியாக வெப்பம் உயரும் என வானிலை எச்சரிக்கை..!

Heat
வழக்கமாக மே மாதம் அனல் கக்கி, பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாவார்கள். ஆனால், இந்த ஆண்டு மே 15-ம் தேதிக்குள்ளேயே வெப்பம் தணிந்து, மழை ஆரம்பித்துவிட்டதால், கோடை வெயிலில் இருந்து மக்கள் தப்பிவிட்டதாக கருதப்பட்டது.
 
ஆனால், தற்போது திடீரென படிப்படியாக தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால், "இனிமேல் ஜூன், ஜூலைதான் கோடைகாலமா?" என்ற கேள்வியை மக்கள் எழுப்பி வருகின்றனர்.
 
வானிலை ஆய்வு மையத்தின் இன்றைய அறிவிப்பில், தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும், உள் தமிழகத்திலும் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்களுக்கு சில சங்கடங்கள் ஏற்படலாம் என்றும், எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
 
Edited by Siva