1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: சனி, 19 மார்ச் 2022 (15:08 IST)

மார்ச் 31-ஆம் தேதிக்குள் நகைக் கடன் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி!

14.4 லட்சம் பேரின் 5 சவரனுக்கு உட்பட்ட நகைகள் வருகிற மார்ச் 31-ஆம் தேதிக்குள் திரும்பத் தரப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
 
கூட்டுறவு வங்கிகளில் 14.40 லட்சம் பேரின் ரூ.6000 கோடி மதிப்பிலான தங்க நகைக் கடன்கள் வரும் 31ஆம் தேதிக்குள் தள்ளுபடி செய்யப்படும் எனவும், போலி நகைகளை அடகு வைத்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.