செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: வெள்ளி, 29 ஆகஸ்ட் 2025 (09:21 IST)

நகைத்திருட்டு வழக்கு: கொலை செய்யப்பட்ட அஜித்குமார் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

Madapuram ajithkumar

திருபுவனத்தில் காவல்துறை விசாரணையில் மரணமடைந்த அஜித்குமார் மீது நகைத்திருட்டு வழக்குப்பதிவு செய்துள்ளது சிபிஐ.

 

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள மடப்புரம் காளி அம்மன் கோவில் செக்யூரிட்டியாக வேலை பார்த்தவர் அஜித்குமார். இவர் தனது நகைகளை திருடிவிட்டதாக நிகிதா என்பவர் அளித்த புகாரில் போலீஸார் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அபர் உயிரிழந்தார். 

 

தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் அஜித்குமார் மரணம் குறித்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் உண்மையாகவே நிகிதாவின் நகை திருடு போனதா? மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தம் காரணமாகவே தனிப்படை போலீஸார் அஜித்குமாரை தாக்கி கொன்றார்களா? என இந்த வழக்கில் சந்தேகம் எழுப்பப்பட்டது. இதனால் இந்த நகைத் திருட்டு வழக்கின் உண்மை தன்மையை ஆராய மதுரை ஐகோர்டு உத்தரவிட்டிருந்தது.

 

இந்நிலையில் இந்த திருட்டு வழக்கும் கொலைக்கு தொடர்புடையது என்பதால் இதுவும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அஜித்குமார் மரணம் தொடர்பான விசாரணையுடன் உண்மையாகவே திருட்டு நடந்ததா என்பது குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள உள்ளது.

 

Edit by Prasanth.K