திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 24 பிப்ரவரி 2018 (16:59 IST)

இது யார் சிலையா இருக்கும்? குழப்பத்தில் மீம்ஸ் கிரியேட்டர்கள்

அதிமுக அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் வெண்கல சிலை குறித்து நெட்டிசன்கள் போடும் மீம்ஸ் வைரலாகியுள்ளது.

 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை தமிழகமெங்கும் உள்ள அதிமுகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர். 
 
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தமிழகமெங்கும், அதிமுக சார்பில் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் 70 அடி உயர வெண்கல சிலையும் திறக்கப்பட்டது. மேலும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது புரட்சி தலைவி அம்மா ’ வும் வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அந்த சிலையில் உள்ள உருவம் ஜெயலலிதாவைப் போல் இல்லை என்ற கருத்து எழுந்துள்ளது. இதை வைத்து நெட்டிசன்கள் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் மீம்ஸ் போட்டு வருகின்றனர். ஜெ. உருவ சிலை வளர்மதி, எடப்பாடி பழனிச்சாமி மனைவி, நடிகை காந்திமதி, நிர்மளா பெரியசாமி ஆகியோர் போன்று உள்ளது என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
 
யார் போன்று ஜெ. உருவ சிலை இருக்கிறது என்று நெட்டிசன்கள் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். குழப்பத்தில் ஒவ்வொரு மீம்ஸூம் ஒவ்வொரு புகைப்படத்துடன் ஒப்பிட்டு வைரலாகி வருகிறது.