ஜெ.வின் பிறந்த நாள் விழா பிப்ரவரி 29? - அட அப்ரசண்டிகளா!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை தமிழகமெங்கும் உள்ள அதிமுகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தமிழகமெங்கும், அதிமுக சார்பில் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதையொட்டி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஜெ.வின் பிறந்தநாள் தொடர்பான போஸ்டர்களும், பேனர்களும் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொள்ளும் ஒரு விழா தொடர்பான ஒரு பேனரில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா 29.02.2018 அன்று கொண்டாடப்படுகிறது என அச்சடிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 29 என்பது லீப் வருடத்தில் அதாவது 4 வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. இந்த மாதம் 28ம் தேதியோடு முடிவடைகிறது. அப்படி இருக்க, பிப்ரவரி 29ம் தேதி என அச்சடிக்கப்பட்டுள்ள விவகாரம் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.