வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 24 பிப்ரவரி 2018 (14:06 IST)

ஜெ.வின் உருவ சிலை ; மிருகங்கள்தான் அப்படி கூறுவார்கள் : ஜெயக்குமார் ஆவேசம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை தமிழகமெங்கும் உள்ள அதிமுகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர். 

 
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தமிழகமெங்கும், அதிமுக சார்பில் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் 70 அடி உயர வெண்கல சிலையும் திறக்கப்பட்டது. மேலும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது புரட்சி தலைவி அம்மா ’ வும் வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அந்த சிலையில் உள்ள உருவம் ஜெயலலிதாவைப் போல் இல்லை என்ற கருத்து எழுந்துள்ளது. அந்த சிலையை வளர்மதி உள்ளிட்ட சிலரோடு ஒப்பிட்டு பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் “ஜெ.வின் சிலையை வளர்மதி போன்றோருடன் ஒப்பிடுகிறார்கள். மனசாட்சி இல்லாத மிருகங்கள்தான் ஜெ.வின் புதிய சிலையை விமர்சிப்பார்கள்” என ஆவேசமாக பதிலளித்தார்.