வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்படும்: அமைச்சர் பொன்முடி பேட்டி!

விழுப்புரத்தில் இயங்கி வரும் ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று பேட்டி அளித்த போது ஜெயலலிதா பல்கலைக்கழகம் பெயரளவுக்கு இருப்பதாகவும் அந்த பல்கலைக்கழகத்தின் நிதி நிலைமை நன்றாக இல்லை என்றும் அதனால் அந்த பல்கலைக்கழகம் மூடப்படும் என்று தெரிவித்தார் 
 
அதேபோல் அண்ணாமலை பல்கலைக்கழகம் நிதி இல்லாமல் சிரமப்படுவதாக எனவே அந்த பல்கலைக்கழகத்தை அப்ளியேட் பல்கலைக்கழகமாக மாற்ற முடிவு செய்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
நிதிநிலை மற்றும் மாணவர்களின் நலன் கருதி 4 மாவட்ட கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளாக இணைக்கப்படும் என்றும் இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்
 
மேலும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மயிலாடுதுறை மாவட்டங்கள் உள்ள கல்லூரிகளும் அண்ணாமலை பல்கலைகழகத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார் ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்படும் என்ற தகவல் விழுப்புரம் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது