1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Jayalalitha taking Writing Prarctice at Apollo Hospital

எழுதுவதற்கு பயிற்சி பெற்று வரும் ஜெயலலிதா

ஜெயலலிதா
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா எழுதுவதற்கு பயிற்சி பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதால் இன்னும் 10 நாட்களில் அவரை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். கடந்த மாதம் 28ஆம் தேதியன்று வேட்பு மனு தாக்கல் பதிவு விண்ணப்பத்தில் அதிமுக கட்சித் தலைவர் சார்பில் ஜெயலலிதாவின் கைரேகை உள்ளது என்று செய்திகள் வெளியானது.
 
எழுத கூட முடியாத நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலை உள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது. தற்போது ஜெயலலிதா எழுதுவதற்கு பயிற்சி பெற்று வருகிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக தாகவல்கள் வெளியாகியுள்ளது.
About Writer
Abimukatheesh