1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 4 டிசம்பர் 2017 (10:38 IST)

ஜெ.வின் தந்தை சந்தியாவால் கொலை செய்யப்பட்டார் - லலிதா பகீர் பேட்டி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமன், தாய் சந்தியாவால் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டார் என ஜெ.வின் உறவினர் லலிதா பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.


 
தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். மேலும், அதே பெங்களூரில் வசிக்கும் ஜெ.வின் அத்தை மகளான லலிதா என்பவரும் அம்ருதா கூற்றில் உண்மையிருக்கிறது. ஜெ.விற்கு ஒரு பெண் குழந்தை இருப்பது உண்மை. அதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என ஜெயலலிதா சத்தியம் வாங்கிவிட்டார். அந்த குழந்தை அது அம்ருதாவா என எனக்குத் தெரியாது” எனக்கூறி பரபரப்பிற்கு வலு சேர்த்துள்ளார். 
 
மேலும், ஜெயலலிதா தொடர்பான பல பகீர் தகவல்களை லலிதா தொடர்ந்து கூறிவருகிறார்.
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் அவர் கூறியதாவது: ஜெ.விற்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. எனது பெரியம்மாதான் அவருக்கு பிரசவம் பார்த்தார். ஜெ.விடம் இருந்த ஈகோதான் உறவினர்களை அவரிடமிருந்து பிரித்தது. ஜெ.வின் தந்தை ஜெயராமனுக்கு சந்தியா விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டதாக என் தாய் என்னிடம் கூறியிருக்கிறார். எனவே, அவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை.
 
ஜெ.வின் அண்ணன் வாசுதேவனுக்கு ஜெ.வின் சொத்தில் எந்த உரிமையும் இல்லை. டி.என்.ஏ சோதனை நடத்தினால் உண்மை தெரிந்துவிடும்” என அவர் கூறினார்.
 
ஜெ.வின் தந்தை ஜெயராமனை, அவரின் தாய் சந்தியாவே விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டார் என லலிதா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.