திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2018 (14:23 IST)

ஜெ.வின் மடியில் இரட்டைக் குழந்தைகள் - வைரல் புகைப்படம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது மடியில் இரண்டு குழந்தைகளை வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

 
கடந்த பிப்.24 ஜெ.வின் பிறந்த நாளன்று சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா தனது முகநூல் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
 
அந்த பதிவில், “அன்று எனது கருவறையில் இருந்த இரட்டைக் குழந்தைகளின் பிறந்தநாளும் இன்றே..மறக்க இயலாத பல நினைவுகளை தன்னுளடக்கிய தினம், இத்தினம்” என குறிப்பிட்டுள்ளார். அந்த பதில் தன்னுடைய குழந்தைகளை ஜெயலலிதா தனது மடியில் வைத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றையும் அவர் பதிவு செய்துள்ளார்.

 
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.