திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (04:01 IST)

பொதுமக்கள் படகு ஓட்டும் நிகழ்ச்சி: முதல்முறையாக மெரினாவில்

சென்னை மக்களுக்கு மட்டுமின்றி சென்னைக்கு சுற்றுலா வரும் பொதுமக்களுக்கும் மிகச்சிறந்த சுற்றுலா தளமாகவும், பொழுதுபோக்கு இடமாகவும் விளங்கி வருகிறது. மெரீனா கடற்கரை.

இந்த நிலையில் மெரீனாவில் முதல்முறையாக படகு ஓட்டும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும், அதிலும் அந்த படகை பொதுமக்களே ஓட்டலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு படகு ஒட்டும் சங்கம் தெரிவித்துள்ளது

மெரினாவில் படகு ஒட்ட பொதுமக்களை அனுமதிப்பதன் மூலம் படகோட்டிகளின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளவும், படகோட்டுதலின் சுவாரஸ்யத்தை பொதுமக்கள் புரிந்து கொள்ளவும் முடியும் என இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ள ராமகிருஷ்ணன் என்பவர் தெரிவித்துள்ளார்.

வரும் மார்ச் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அதாவது வரும் சனி, ஞாயிறு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும், அன்றைய தினம் பிரத்யகமாக ஸ்டால்கள் அமைக்கப்பட்டு, படகுகள் குறித்த பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.