தொடர்புடைய செய்திகள்
- கனவு காண்பதை குறுக்கிட முடியாது - ஜெயகுமார் பாஜகவுக்கு பதிலடி!
- ரஜினி,கமல் போன்ற நடிகர்களுடனும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தால்....- அருண்விஜய் பேட்டி.
- வங்கதேசத்தில் சிட்டகாங் அருகே வெடித்துச் சிதறிய கன்டெய்னர்கள்: குறைந்தது 40 பேர் பலி
- பாஜகவில் இணையும் பிரபல நடிகை....?
- அதிமுக கொடி- கட்சியை விரைவில் கைப்பற்றுவோம்- சசிகலா
சசிக்கலாவை நம்பி புதைகுழியில் விழுந்துடாதீங்க..! – பாஜகவுக்கு ஜெயக்குமார் அறிவுரை!
சசிக்கலா பாஜகவில் இணைவாரா என்பது குறித்த கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்துள்ள பதில் வைரலாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று விடுதலையான சசிக்கலா மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவதாக பேசி வருவது அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சமீபமாக தான் அதிமுகவில் தலைமையேற்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக சசிகலா பேசி வருகிறார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார் “சசிக்கலாவை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை. கட்சிக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவரை கட்சி தொண்டர்களோ மக்களோ ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். பலரும் அமமுகவிலிருந்து விலகி தற்போது அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். சசிக்கலாவை பாஜகவில் இணைத்து கொள்வது அவர்களது தனிப்பட்ட முடிவு. ஆனால் அவரை நம்பி புதைக்குழியில் விழுந்துவிட வேண்டாம் என்பது என் கருத்து” என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
