திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 5 ஜூன் 2022 (15:28 IST)

அதிமுக கொடி- கட்சியை விரைவில் கைப்பற்றுவோம்- சசிகலா

அதிமுக கொடி- கட்சியை விரைவில் கைப்பற்றுவோம் என ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார்.

முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று திண்டிவனம் வந்தார். அப்போது அவரிடம் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சி முடிந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில் சட்டம்  ஒழுங்கு சரியில்லை என்று குற்றம்சாட்டினார்.

அதன்பின், டெல்டா விவசாயிகள் தற்போது நெல் விதை இல்லாமல் தவிக்கின்றனர். இதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக வளர்வதாகக் கூறினாலும் பாஜக வளரவில்லை.

மேலும், மக்கள் ஆதரவு எனக்கு அதிகளவில் உள்ளது., எனவே விரைவில் அதிமுக கொடியையும் கட்சியையும் கைப்பற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்.