வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 3 ஜூலை 2024 (12:06 IST)

நீட் தமிழகத்திற்கு தேவை இல்லை என்ற விஜய்யின் கருத்தை வரவேற்கிறோம் : ஜெயக்குமார்

நடிகர் விஜய் இன்று கல்வி விழாவில் பேசிய போது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவருடைய பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
 
இன்று விஜய் பேசியபோது, ‘நீட் தேர்வினால் தமிழ்நாட்டின் கிராம புறத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஏழை எளிய மாணவ மாணவிகள் பாதிக்கிறார்கள் என்பது தான் சத்தியமான உண்மை .
 
மேலும் நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது, பன்முகத்தன்மை என்பது பலம் பலவீனம் அல்ல ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் பன்முகத்தன்மையை சிதைக்கிறது. நீட் தேர்வு குளறுபடியால் மக்கள் மத்தியில் நீட் தேர்வு குறித்த நன்பகத்தன்மை போய்விட்டது, நாடு முழுவதும் நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் இந்த செய்தி மூலம் நாம் புரிந்து கொண்டது என்று விஜய் பேசினார்.
 
இந்த நிலையில் விஜய்யின் இந்த பேச்சுக்கு பல அரசியல் தலைவர்கள் ஆதரவளித்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளித்துள்ளார். நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவை இல்லை என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு என்றும் அந்த கருத்தை வலியுறுத்தி பேசிய விஜய்யின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.
 
Edited by Mahendran