வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 3 ஜூலை 2024 (10:46 IST)

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

நடிகர் விஜய் என்று இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நிலையில் இந்த விழாவில் அவர் நீட் தேர்வு குறித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் கலந்து கொண்ட முதலாவது கல்வி விருந்து வழங்கும் விழாவில் தமிழ்நாட்டில் சரியான தலைவர்கள் இல்லை என்று பேசினார் என்பதும் அதேபோல் போதைப்பொருள் பழக்கம் குறித்தும் பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நீட் தேர்வு குறித்து அதுவும் எதுவும் பேசவில்லையே என சிலர் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் இன்றைய விழாவில் அவர் நீட் தேர்வு குறித்து பரபரப்பாக பேசி உள்ளார். நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை என்றும் கல்வியை மத்திய அரசு பொது பட்டியலுக்கு எடுத்துச் சென்றதால் தான் பிரச்சனை என்றும் அவர் தெரிவித்தார்.

மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்கு வேறு பாடத்திட்டத்தில் தேர்வு நடத்தினால் எப்படி சரியாக இருக்கும் என்றும் தேர்வில் நடந்த குளறுபடிகள் காரணமாக மக்கள் நம்பிக்கை இழந்து உள்ளார்கள் என்றும் அவர் பேசியுள்ளார். நீட் தேர்வு குறித்து விஜய் பேசிய பேச்சை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran