செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 செப்டம்பர் 2018 (13:37 IST)

விஜயபாஸ்கருக்கு தினகரன் கொடுத்த பதிலடி

புதுக்கோட்டையில் தன்னை எதிர்த்து போட்டியிட்டு தினகரனால் வெற்றி பெற முடியுமா என நேற்று நடந்த கண்டனம் கூட்டம் ஒன்றில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சவால்விட்டார்.

இந்த சவாலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், 'திருவாரூர் இடைத்தேர்தலில் எங்கள் வேட்பாளரை எதிர்த்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்டு டெபாசிட் வாங்க முடியுமா' என்று கூறியுள்ளார்.

அதிமுக அமைச்சர்களின் ஒவ்வொரு கேள்விகளுக்கும், சவால்களுக்கும் உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருவதை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். வரும் இடைத்தேர்தல் மட்டுமின்றி பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களிலும் தினகரனின் அதிரடி தொடரும் என்றே அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.