துணிவிருந்தால் என்னோடு மோதிப்பாருங்கள்: தினகரனுக்கு விஜயபாஸ்கர் சவால்
கடந்த சில மாதங்களாகவே அதிமுக அமைச்சர்களுக்கும், அம்முக துணை பொதுச்செயலாளர் தினகரனுக்கும் இடையே காரசாரமான சொற்போர் நடந்து வருகிறது. 18 எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பு இரு கட்சிகளுக்கும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தினகரனுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேசியதாவது:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட, டி.டி.வி.தினகரன், சசிகலாவின் விசுவாசி அல்ல, அவர், சசிகலா புஷ்பாவின் உண்மையான விசுவாசி.
10 ஆண்டுகள் பதுங்கு குழிக்குள் இருந்தவர், குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்கிறார். அதிமுகவை எதிர்ப்பவர்கள், திமுகவாக இருந்தாலும் சரி - டி.டி.வி. தினகரனாக இருந்தாலும் சரி, நெல்லிக்காய் மூட்டை போன்று சிதறி ஓடுவார்கள்.
டிடிவி தினகரனுக்கு துணிவிருந்தால், புதுக்கோட்டை தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா? என்று அமைச்சர் விஜயபாஸ்கர் சவால் விடுத்துள்ளார்.