தொடர்புடைய செய்திகள்
- டாஸ்மாக் மதுக்கடைகளை காலையில் திறப்பதா? டிடிவி தினகரன் கண்டனம்..!
- பருவம் தப்பி பெய்த கனமழையால் உப்பள தொழிலாளர்கள் பாதிப்பு: டிடிவி தினகரன்..
- சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள்: டிடிவி தினகரன் வாழ்த்து..!
- நாளுக்கு நாள் சட்டம் - ஒழுங்கை சீரழித்துக் கொண்டு வரும் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனங்கள்- ஓபிஎஸ்
- எதிர்ப்பை மீறி ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் பணியமர்த்துவதா? டிடிவி தினகரன் கண்டனம்..!
ஓபிஎஸ், தினகரன், சசிகலா மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் கட்சியில் சேர்க்க மாட்டோம்: ஜெயக்குமார்
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இது குறித்து இன்று விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகிய மூவருக்கும் இந்த மன்னிப்பு கடிதம் பொருந்தாது என்று தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட மூவரை தவிர வேறு யார் வேண்டுமானாலும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் சேர்ந்து கொள்ளலாம் என்றும் மூவரையும் மீண்டும் அதிமுகவில் சேர்க்கும் எண்ணம் துளி கூட அதிமுகவுக்கு கிடையாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
எனவே ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய மூவரும் மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
