1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (11:02 IST)

20,000 புத்தகங்கள் படித்தாலும் அரசியலில் அண்ணாமலை எல்.கே.ஜி தான்: ஜெயகுமார்

20000 புத்தகங்கள் படித்து இருந்தாலும் அரசியலில் அண்ணாமலை எல்கேஜி தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பின்னர் அண்ணாமலை உள்பட பல பாஜக தலைவர்களை அதிமுக பிரமுகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ‘என்னதான் 20000 புத்தகங்கள் அண்ணாமலை படித்திருந்தாலும் அரசியலில் அவர் எல்கேஜி மாணவராக தான் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

மேலும் அன்புமணி என்ற பெயரை இந்தியா முழுவதும் அறிமுகம் செய்தது ஜெயலலிதா தான் என்றும் பாமக, அதிமுக கூட்டணியில்தான் இணைய இருந்தது என்றும் ஆனால் திடீரென இரவோடு இரவாக சீட் பேரம், மற்ற பேரங்கள் அவருக்கு முக்கியமாக தெரிந்ததால் பாஜக கூட்டணிக்கு சென்று விட்டார் என்றும் ஜெயகுமார் தெரிவித்தார்.

பாமகவில் தற்போது ஐந்து எம்எல்ஏக்கள் உள்ளனர் என்றால், அதற்கு அதிமுக தான் காரணம், தனித்து நின்று ஒரு எம்எல்ஏ தொகுதியில் கூட அவர்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது. அதிமுக நன்றியை அவர்கள் மறக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்

Edited by Mahendran